கண் தானம் விழிப்புணர்வு பேரணி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, பேரணியை துவக்கி வைத்தார். பின்,
அவர் பேசுகையில், ‘மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு, 102 கண்களும், இந்தாண்டு கடந்த, ஆகஸ்ட் மாதம் வரை, 48 கண்களும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கண் வங்கியில் சேகரிக்கப்பட்டுள்ளன.
இந்த கண்தானம் மூலம் சேகரிக்கப்படும் கண்கள், பார்வை இழந்தோருக்கு பயன்படுத்தப்பட்டு பார்வையை மீட்டெடுக்க உதவுகின்றன. எனவே, பொதுமக்கள் அனைவரும் கண்தானம் செய்ய உறுதி ஏற்க வேண்டும்,’ என்றார்.
இதில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை விழி ஒளி பரிசோதக மாணவர்கள் மற்றும் இ.எஸ்., செவிலியர் கல்லுாரி மாணவர்கள் என, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கண் தான அவசியம் குறித்தும் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி நான்கு முனை சந்திப்பு வரை சென்று பேரணியாக சென்றனர்.
அப்போது, மாவட்ட திட்ட மேலாளர் உமா ராணி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை துணை முதல்வர் அனிதா, மருத்துவ கண்காணிப்பாளர் ரவிக்குமார், உதவி மருத்துவ நிலைய அலுவலர் வெங்கடேசன், இணை பேராசிரியர் தரணிவேல், துணை பேராசிரியர் அனுராதா, தேசிய நலக்குழும ஒருங்கிணைப்பாளர் ரகுநாத், உதவி திட்ட மேலாளர் பாக்கியலட்சுமி, உதவி அறுவை சிகிச்சை நிபுணர் யாமினி, தனியார் மருத்துவமனைகளின் கூட்டமைப்பு மாநில செயலாளர் திருமாவளவன், மாவட்ட இந்திய மருத்துவ சங்க பொறுப்பாளர் கோவிந்தராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும்
-
ஹிந்து கோவில்களில் தொடர் சிலை திருட்டு; ஹிந்து முன்னணி கடும் கண்டனம்
-
மகப்பேறு விடுப்பால் ஏற்படும் காலிபணியிடங்களை அரசு எவ்வாறு சமாளிக்கிறது; கேட்கிறது உயர்நீதிமன்றம்
-
சிலிண்டர் லோடு மினி லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து
-
மத்திய காலணி பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
-
புதுச்சேரி மாணவர்கள் உலகிற்கே தீர்வுகளை தர முடியும் :ஐ.சி.டி., அகாடமி மாநாட்டில் கவர்னர் நம்பிக்கை
-
பல்கலையில் காத்திருப்பு போராட்டம் அமைச்சர் பேச்சுவார்த்தை