அமெரிக்க கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி: மீண்டும் சொல்கிறார் டிரம்ப்

1

வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கூறி உள்ளதாவது;

ஏபிசி போலிச் செய்தி நிறுவனம் தெரிவித்ததைப் போல, நான் ஈரானைப் பேச்சுவார்த்தை அழைத்து கட்டாயப்படுத்த முயற்சிக்கவில்லை. அவர்களுக்குப் பயனற்றதாகத் தோன்றும் ஒரு ஒப்பந்தத்தில், அவர்கள் கையெழுத்திட்டாலும் எனக்குக் கவலையில்லை.

அவர்களை வலுக்கட்டாயமாக ஒரு ஒப்பந்தம் செய்ய நான் விரும்பவில்லை. ஹார்முஸ் ஜலசந்தியின் மீது முழுமையான கட்டுப்பாடு அமெரிக்காவிடம் இருக்கிறது. ஈரானின் பொருளாதாரம் முற்றிலுமாக சரிந்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையையே நான் விரும்புகிறேன். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement