நேபாளத்துக்கு தொடர்ந்து உதவிக்கரம்; 5.5 டன் அத்தியாவசிய மருந்துகள், மீட்புக் குழுவை அனுப்பி வைத்தது இந்தியா
புதுடில்லி: நேபாளத்துக்கு 5.5 டன் அத்தியாவசிய மருந்துகள், 11 பேர் கொண்ட மீட்புக் குழுவை ஏற்றிக் கொண்டு இந்தியாவின் 5வது விமானம் இன்று (செப்.,02) புறப்பட்டு சென்றுள்ளது.
நம் அண்டை நாடான நேபாளம், சமீபத்தில் பனிப்பாறை உடைந்ததால் உருவான பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பெரும் பாதிப்புகளை சந்தித்தது. இதுவரையில் 1,050 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
மீட்புப் பணிகளில் இந்தியா உட்பட பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. மேலும், பல நாடுகள் நிவாரணத்துக்கான உதவித் தொகையை அறிவித்துள்ளன. இந்நிலையில் நேபாளத்துக்கு 5.5 டன் அத்தியாவசிய மருந்துகள், 11 பேர் கொண்ட மீட்புக் குழுவை ஏற்றிக் கொண்டு இந்தியாவின் 5வது விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்று (செப்.,02) ஐந்தாவது இந்திய விமானம் நேபாளத்திற்குப் புறப்பட்டுள்ளது. இது சிறப்பு உபகரணங்களுடன் கூடிய 11 பேர் கொண்ட மீட்புக் குழுவையும், 5.5 டன் அத்தியாவசிய மருந்துகளையும் ஏற்றிச் செல்கிறது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இதுவரை நேபாளத்திற்கு இந்தியா செய்துள்ள உதவிகள் பின்வருமாறு:
* கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி விமானப்படைக்கு சொந்தமான சி-130 ஜே ஹெர்குல்ஸ் விமானம் வாயிலாக 10 டன் நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
* ஆகஸ்ட் 27ம் தேதி விமானப்படைக்கு சொந்தமான 2வது சி -17 குளோப்மாஸ்டர் விமானம் வாயிலாக, 37.5 டன் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன. அதில் ஒரு டன் உணவு பொருட்கள் அடங்கும்.
* ஆகஸ்ட் 28ம் தேதி 3வது சி-130 ஜே ஹெர்குல்ஸ் விமானம் வாயிலாக இந்திய ராணுவத்தை சேர்ந்த 5 வீரர்கள் ( சுரங்கங்களில் சிக்கியவர்களை மீட்பும் திறன் பெற்றவர்கள்), 6 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் உடன் ஜெனரேட்டர்கள், உணவு, தண்ணீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட 10 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
* ஆகஸ்ட் 30ம் தேதி 4வது விமானத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் சுரங்க தொழில்நுட்ப கருவிகள், டிஎன்ஏ மற்றும் தடயவியல் பரிசோதனை வல்லுநர்கள், போர்வைகள், தார்ப்பாய்கள், பிளாஸ்டிக் காகிதங்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம். விமர்சனங்களை தவிர்க்கலாமே.
மனிதனிமான அடிப்படையில் செய்யும் உதவியை இழிவாக பேசுவதை தவிர்க்கலாமே? இந்தியா சுதந்திரம் அடைந்து அதன் பின் உதவி செய்த காசில் இந்தியா மீதே போர் தொடுக்க வெளிநாடுகளில் ஆயுதம் வாங்கிய பாகிஸ்தானின் விசுவாசிகள் கூட இங்கே வாக்கு வங்கிக்காக மன்னிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
நம்மிடம் இருந்து உதவி பொருட்கள் வாங்கிவிட்டு நம் நாடு தான் சுற்றுசூழல் கெடுத்துவிட்டோம் என்று புகார் கூறுகிறார்கள்.
ஒருத்தர் தொடர்ந்து ஆள்கிறார் என்றால்
ஒரு பிரயோசனமும் இல்ல ...குடுத்து குடுத்து நாம என்னத்த சாதிச்சோம் வாங்கி தின்னு கொழுத்துட்டு சீனாக்காரன் பக்கம் போயிர்ராங்க ...நம்மளை சுத்தி எவனும் நம்பிக்கையானவன் கிடையாது ..... இந்த பேரழிவுக்கு மூல காரணமே சப்ப மூக்கன் தான் ..எவனையாவது வாய தொறக்க சொல்லுங்க ..மூச்சு விடமாட்டாங்க ...அமெரிக்கா UN, ஐ ந மனித உரிமை , பிரிட்டன் ..ஏன்னா நேபாளம் , இந்தியா ஹிந்து நாடுகள் அவ்ளோதான் ...நாமதான்யா நடுநிலைனு பைத்தியம் மாதிரி பேசிட்டு திரியுறோம் அவங்கெல்லாம் விவரமாதான் இருக்காங்க ..
Mohan Sir, you're spot on. மிக சரியாக கூறியுள்ளீர்கள்
mohan அருமை. சுரணை இல்லாத ஜன்மங்கள் இங்கே இருக்கும் வரை இதெல்லாம் தவிக்க முடியாது...நம் உள்நாட்டு துரோகிகளைவிட இந்த வெளிநாட்டு பதர்கள் எவ்ளோ மேல்