2029ல் பிரதமர் வேட்பாளர் தலைவர் முதல்வர் விஜய்தான்; தவெக எம்எல்ஏ., கனிமொழி
கோவை: ''வரும் 2029ல் பிரதமர் வேட்பாளர் தலைவர் முதல்வர் விஜய்தான்,'' என தவெக எம்எல்ஏ., கனிமொழி தெரிவித்துள்ளார்.
அவரது பேட்டி: 2029 பிரதமர் வேட்பாளர் தலைவர் முதல்வர் விஜய்தான். கடந்த 2, 3 நாட்களாக பயங்கரமாக போய் கொண்டு இருக்கிறது. 2025ல் இது மாதிரியான ஒரு நிகழ்வு தான் ஆனது. இது மாதிரி தான் என்கிட்ட கேட்டார்கள். 2026 என்ன நடந்ததுனு இந்த நாடே பார்த்து இருக்கும்.
2029ல் முக்கியமான விஷயம் என்னவென்றால், பிரதமர் யாருனு முடிவு பண்ண போறது டில்லியில் இருந்து கிடையாது. அது தமிழகத்தில் இருந்து தான் முடிவு பண்ணி வர போறாங்க. அதிர்ச்சியான இந்திய அரசியல் 2029ல் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும். காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறதா, வெளியே போகிறதா என்பதை நீங்கள் 2026ல் பார்ப்பீங்க, விஜயை முதல்வர் இருக்கையில் உட்கார வைத்தது ராகுல் தான்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் தான் அவரை கையைப்பிடித்து அழைத்துச் சென்று நாற்காலியில் உட்கார வைப்பார். 2025ல் கணித்தது 2026ல் நடந்து இருக்கிறது. 2029ல் இது ஆணித்தரமாக நடக்கும், கண்டிப்பாக நடக்கும். இவ்வாறு தவெக எம்எல்ஏ., கனிமொழி கூறினார்.
ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்கவில்லை என்றால் பதவி விலகுவோம் என்று காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார் சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். அது சர்ச்சையான நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், முதல்வர் விஜயை சந்தித்து சமாதானம் செய்திருந்தார்.
இந்நிலையில், தவெக எம்எல்ஏ., கனிமொழி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். இதனால் வரும் நாட்களில் தவெகவினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்குமான வார்த்தைப் போர் மீண்டும் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
தவெக எம்எல்ஏ கனிமொழி செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
பைத்தியமா இவன்? இவ்வளவு நேரம் நல்லாத்தானயா பேசிக்கிட்டு இருந்தான்? எக்ஸ்கியூஸ் மீ ஸாரி பார் தெ டிஸ்டர்ப்பன்ஸ் இந்த அட்ரஸ கொஞ்சம் கேட்டு சொல்ல முடியுமா?
இந்தியாவின் உள்கட்டமைப்பு - ஜிடிபி - பணவீக்கம் - ரேப்கோ வட்டி விகிதம் - உள்நாட்டு உற்பத்தி விகிதம் - தேச பாதுகாப்பு - ராணுவ பலம் மற்றும் கட்டமைப்பு - எதிரி நாடு - சர்வதேச நாட்டு சவால்கள் - வேலை வாய்ப்பு - புதிய பாதுகாப்பு கண்டுபிடிப்புகள் - இவைகள் பற்றி ஏதாவது இந்த ஜால்ராக்களுக்கு தெரியுமா ?
வாயைத் திறக்காமல் இருக்கும் வரை ஓகே .......
தவெக எம்எல்ஏ., கனிமொழி என்று இங்கும் ஒரு கனிமொழியா எத்தனை கனிமொழிதான் இருப்பார்கள் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கனிமொழியா
நீங்க முதல்ல ஸ்கூல்ல நல்ல படிச்சு பாஸ் பண்ணுங்க அப்புறமா காலேஜ்க்கு போகலாம். திராவிட கழகங்கள் ஊழல் செய்தன அதனால் நீங்க வந்துடீங்க. பிஜேபி திராவிட கழகங்கள் இல்லை. அதுவும் மத்தியில் ஆளும் பிஜேபி கண்டிப்பாக திராவிட கழகங்கள் இல்லை. விஜய் நல்லவர் வல்லவர் மோடியை விட சிறந்தவர் என்பதை இந்த 5 வருடங்கள் சிறப்பான ஆட்சி நடத்தி நிரூபிக்கட்டும். பிறகு பார்க்கலாம்.
திமுக போல் கமிஷன் ஆட்சி நடக்கவில்லை என்பது தற்போது தவெக ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று. அதேவேளையில், தவெக அரசு திறம்படச் செயல்பட்டு, தமிழக அரசுத் துறைகளில் மலிந்து கிடக்கும் அளப்பரிய ஊழலை அடுத்த ஐந்து ஆண்டுகளில் அடியோடு களைவது அதன் முதன்மை பணி என்பது நினைவில் கொள்ள வேண்டும். தமிழக அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழலை அடியோடு ஒழித்து சாதனை படைத்தால், உயர் பதவிக்கான வாய்ப்பு, தானாக தேடி வரும்.
If TVK wins just imagine the reels shooting from parliament to foreign visits.Seeing the reels people will forget everything.
தமிழக மக்கள் வேண்டுமானால் கூத்தாடி பின்னால் ஓடலாம், பிற மாநில மக்கள் இந்த அளவுக்கு இவர்களை போல முட்டாள்களாக இருப்பார்கள் என்று நினைத்தால் என்ன செய்வது?? மாநில அரசியலே இன்னும் ஒழுங்கா தெரியலை, அடுத்து உடனே பிரதமர் ஆகிடனும். இன்னும் சினிமா மோகத்துலே இருந்தா எப்படி??
இந்த தற்குறிகளின் காமெடிக்கு அளவே இல்லாம போச்சு.
பாராளுமன்ற தேர்தலில் TVK தொண்டர்கள் ஆர்வம் இல்லாமல் இருப்பதை சரிக்கட்டும் விதமாக இப்படி சொல்கிறார்கள். இல்லை என்றால் TVK வெற்றி பெறுவது நடக்காது.மேலும்
-
சலுகைகள் ரத்து? பதவி நீக்கத்தை தவிர்க்க ராஜினாமா செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கு...: மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
-
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: சதம் விளாசினார் ஸ்மிருதி மந்தனா
-
இந்திய படையில் 768 பேர் * * ஆசிய விளையாட்டுக்கு...
-
9 பதக்கம் வென்றது தமிழகம் * தேசிய யூத் தடகளத்தில்...
-
பி.சி.சி.ஐ., புதிய முடிவு
-
மயங்கி விழுந்த எகிப்து வீராங்கனை