முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: 35,465 நபர்கள் பங்கேற்க விண்ணப்பம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க 35,465 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் வரும் 9ம் தேதி துவங்க உள்ளது. இதில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு 31 வகையான போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கு 7 வகையான போட்டிகளும், பொதுமக்களுக்கு 10 வகையான போட்டிகளும் நடத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் அவர்களின் உடல் பாதிப்புக்கேற்ப போட்டி நடத்தப்படும். போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ஆக., 31ம் தேதிக்குள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, 14,468 பள்ளி மாணவ, மாணவிகள், 5,504 கல்லுாரி மாணவ, மாணவிகள், 1,133 அரசு அலுவலர்கள், 13,876 பொதுமக்கள், 487 மாற்றுத்திறனாளிகள் என மொத்தமாக 35,465 பேர் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர். மாவட்டத்தில் 6 இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பெரும்பாலான விளையாட்டு போட்டிகள் இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது. சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கால்பந்து போட்டியும், தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஹாண்ட் பால், டேபிள் டென்னிஸ், கேரம் உள்ளிட்ட போட்டிகளும், ஐ-ஷட்டல் ஸ்டுடியோவில் பேட்மிட்டனும், ஆக்சாலிஸ் பள்ளியில் நீச்சல் போட்டியும், கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஸ்கேட்டிங் போட்டியும் நடைபெற உள்ளது. மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார் தலைமையிலான அலுவலர்கள் போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்
-
டில்லியை நோக்கி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கோளாறு; லக்னோவில் அவசர தரையிறக்கம்
-
மத்திய அரசு குறித்து சர்ச்சை கருத்து; ஓய்வுபெற்ற அதிகாரியிடம் 8 மணிநேரம் விசாரணை
-
வெள்ளம் பாதித்த வாரணாசி; மீட்பு, நிவாரண பணிகளை முடுக்கி விட்ட பிரதமர் மோடி
-
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்; பஞ்சாப் ஆம்ஆத்மி அரசு மீது பாஜ எம்பி ராகவ் சத்தா குற்றச்சாட்டு
-
ஐகோர்ட்டில் தமிழை அங்கீகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தனித் தீர்மானம்; சட்டசபையில் நிறைவேறியது
-
சென்னை உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு