சிறை கைதி தப்பிய விவகாரம் போலீசார் இருவர் சஸ்பெண்ட்
சிவகங்கை: சிறைக்கு அழைத்து சென்ற கைதியை தப்பிக்க விட்ட போலீசார் மகாராஜன், 42, ஆனந்தி, 27, ஆகிய இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சிவகங்கை, இலந்தமங்களத்தைச் சேர்ந்தவர் அரவிந்த், 25. இவர், 10ம் வகுப்பு மாணவனுக்கு தொல்லை கொடுத்து, கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில், மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
போக்சோ சிறப்பு நீதிமன்ற விசாரணைக்காக, போலீசார் நேற்று முன்தினம் அவரை சிவகங்கை அழைத்து வந்தனர்.
விசாரணை முடிந்த பின், டூ - வீலரில் போலீசார் அழைத்து சென்ற போது, மதுரை யானைக்கல் சந்திப்பு அருகே, அரவிந்த் தப்பினார்.
அவரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கவனக்குறைவாக செயல்பட்ட சிவகங்கை ஆயுதப்படை போலீசார் மகாராஜன், எஸ்.எஸ்.கோட்டை பெண் போலீஸ் ஆனந்தி இருவரையும், சிவகங்கை எஸ்.பி., அபிஷேக் குப்தா, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement