மூத்த குடிமக்களின் வாழ்க்கைத்தர மேம்பாடு குறித்து விழிப்புணர்வு
நாமக்கல்:சமூக
நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 'அடல் வயோ அப்யுதேய யோஜனா'
என்ற மாநில செயல் திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்களின் வாழ்க்கைத்தர
மேம்பாடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு, நாமக்கல்லில்
நடந்தது.
மாவட்ட சமூகநல அலுவலர் கவுரி தலைமை வகித்தார். திட்ட
ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி வரவேற்றார். மாவட்ட சட்டப்பணிகள்
ஆணைக்குழு வக்கீல் சரண்யா, காவல்துறை பிரதிநிதி, அரசு மருத்துவ
கல்லுாரி முதியோர் நல மருத்துவர் மற்றும் 'பராமரிக்கும் கரங்கள்'
அமைப்பின் பீட்டர் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக
கலந்துகொண்டனர்.மூத்த குடிமக்கள் நலன் சார்ந்த சட்டங்கள்,
முதியோர் இல்லங்களில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு, முதியோரின்
உடல் மற்றும் மனநலம், இளம் தலைமுறையினர், முதியோர்களை உரிய முறையில்
பராமரித்து பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து
அறிவுறுத்தப்பட்டது. பாதுகாப்பு அலுவலர் அருணா,
விளக்கவுரையாற்றினார். ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி வித்யா
நன்றி கூறினார். மகளிர் திட்டத்தினர், நேரு யுவ கேந்திரா ஆர்வலர்கள்,
என்.எஸ்.எஸ்., தன்னார்வலர்கள், முதியோர் இல்ல பொறுப்பாளர்கள் மற்றும்
பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
சலுகைகள் ரத்து? பதவி நீக்கத்தை தவிர்க்க ராஜினாமா செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கு...: மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
-
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: சதம் விளாசினார் ஸ்மிருதி மந்தனா
-
இந்திய படையில் 768 பேர் * * ஆசிய விளையாட்டுக்கு...
-
9 பதக்கம் வென்றது தமிழகம் * தேசிய யூத் தடகளத்தில்...
-
பி.சி.சி.ஐ., புதிய முடிவு
-
மயங்கி விழுந்த எகிப்து வீராங்கனை