மல்லசமுத்திரம் ஏ.கே.வி., பள்ளி விளையாட்டு போட்டியில் சாதனை

மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் ஏ.கே.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், குழு விளையாட்டு போட்டி மற்றும் தடகள விளையாட்டு போட்டிகளில் வட்டார அளவில் சாதனை படைத்துள்ளனர்.
மல்லசமுத்திரம் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள், வெண்ணந்துார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில், ஏ.கே.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின், 14 மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட மாணவியர் பிரிவில், எறிபந்து போட்டியில் முதலிடம், 14 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில், இறகுப்பந்து போட்டியில், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். மேலும், 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர் பிரிவில், தடகள போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, பள்ளி தலைவர் ஆறுமுகம், தாளாளர் முத்துசாமி, கல்வி ஆலோசகர்கள் குழந்தைவேலு, சந்திரசேகரன், பள்ளி முதல்வர் இளமுருகன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்தினர்.

Advertisement