'கொலை, கொள்ளை அதிகரிப்பு இரும்புக்கரம் கொண்டு தடுக்கணும்'

நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கொ.ம.தே.க., - எம்.பி., மாதேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டம், லாரி, கோழிப்பண்ணை தொழில், பள்ளி, கல்லுாரிகள், சேகோ பேக்டரி, ரிக் தொழில், டெக்ஸ்டைல் தொழில் உள்ளிட்ட தொழில் வளம் நிறைந்த மாவட்டமாகும். சிறப்பு பெற்ற மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக அடிக்கடி குற்றச்சம்பவங்கள் நடந்து வருகின்றன. கொங்கு மண்டலம் என்றும் தொழில் வளர்ச்சியில் மேலோங்கி அமைதி பூங்காவாக திகழும் பகுதி. அதில், குறிப்பாக நாமக்கல் மாவட்டம் மிகவும் அமைதியான பகுதி. இங்கு தற்போது அடிக்கடி நடக்கும் குற்றச்சம்பவங்கள், மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது, மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கும். எனவே, மாவட்ட காவல்துறை இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை தடுக்க வேண்டும். மேலும், கூடுதல் போலீசாரை நியமித்து, ரோந்து பணியை திவீரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.

Advertisement