விவசாய கமிஷன் பரிந்துரையை ஏற்று செயல்படுத்த வலியுறுத்தல்

ஈரோடு:ஈரோட்டில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் நல்லசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழ்நாடு கள் இயக்க அமைப்பாளர்கள் பாலசுப்பிரமணியம், பழனிசாமி, ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம் உட்பட பலர் பேசினர்.

சம்பள கமிஷன் பரிந்துரையை ஏற்று செயல்படுவது போல, விவசாய கமிஷன் பரிந்

துரையை ஏற்று நடைமுறைப்படுத்துவது மட்டுமே, விவசாயிகள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். காவிரி நதிநீர் பங்கீட்டில், தினந்தோறும் நீர் பங்கீடு என்ற அம்சத்தை தீர்ப்பில் இடம் பெற செய்ய வேண்டும். இதுவே இரு மாநில உறவை மேம்படுத்தும்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்று, கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு நீக்க அறிவிக்க வேண்டும். இந்தியாவில் விளையும் சமையல் எண்ணைக்கு மட்டுமே அரசு மானியம் வழங்கி, அவற்றை பங்கீட்டு கடைகளில் சந்தைப்படுத்த வேண்டும். விவசாய துறையின் சாதனையாளர்களுக்கு பத்ம விருது வழங்கிட வேண்டும். விவசாய நாடான இந்தியாவுக்குள் தொடர்ந்து இறக்குமதி செய்வதும், அவற்றுக்கு மானியம் வழங்கி முன்னின்று சந்தைப்படுத்தி வருவதும், விவசாய விரோத போக்காகும். உள்நாட்டு விளை பொருட்களை சந்தைப்படுத்தி, உயர்த்திட வேண்டும் என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.

Advertisement