சிறுமிக்கு குழந்தை வாலிபருக்கு 'போக்சோ'

திட்டக்குடி:சிறுமியை திருமணம் செய்து, குடும்பம் நடத்திய வாலிபர் மீது 'போக்சோ' பிரிவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திட்டக்குடி அடுத்த என்.நாரையூரைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் தனசேகர், 21; இவர் நாகப்பட்டிணம் மாவட்டத்தைச் சேர்ந்த உறவினரான 16 வயது சிறுமியை கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டு, குடும்பம் நடத்தி வந்தார்.

இதில், சிறுமி கர்ப்பமானார். கடந்த மாதம் 30ம் தேதி பிரசவ வலி காரணமாக நாகப்பட்டிணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து டாக்டர் அளித்த புகாரின் பேரில், திட்டக்குடி அனைத்து மகளிர் போலீசார், தனசேகர், இவரது உறவினர் சந்திரசேகர் மனைவி விஜயகுமாரி இருவர் மீதும் 'போக்சோ' பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement