குடிநீர் கேட்டு ரோடு மறியல்

வேடசந்துார்:தட்டாரப்பட்டி ஊராட்சி கலைஞர் நகர், காந்தி நகர் பகுதியில் சில வாரங்களாக முறையான குடிநீர் விநியோகம் இல்லை. இதனால் அவதிக்குள்ளான இப்பகுதி மக்கள் வேடசந்துார் ஒன்றிய அலுவலகம் அருகே காலி குடங்களுடன் ரோடு மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார், ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement