பஸ் மோதி மூதாட்டி பலி
பெரியமேடு: சாலையை கடக்க முயன்ற மூதாட்டி சாவித்திரி, 70, பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரியமேடு பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி, 70. இவர், சூளை ரவுண்டானா அருகே நடைபாதையில் பழ வியாபாரம் செய்து வருகிறார்.
சூளை ரவுண்டானா அருகே, நேற்று முன்தினம் இரவு சாலையை கடக்க முயன்றார். அப்போது, பிராட்வேயில் இருந்து செங்குன்றம் செல்லும் தடம் எண்: 242 பேருந்து, அவர் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார். கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னை, திருச்சி உள்ளிட்ட 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
-
கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே ஆசிரியர்கள் பணி; ஸ்டாலின் வலியுறுத்தல்
-
திருச்சூரில் லாரி மீது கார் மோதியது; தமிழக மாணவர்கள் 8 பேர் பலி
-
வந்து விட்டது வாடை வராத பெயின்ட்
-
பொது அதிகாரம் தொடர்பான வழக்கும் சொத்துக்கு புதிய வில்லங்கம்!
-
பீம் அமைக்க கான்கிரீட் போடுவதில் தரத்தை உறுதி செய்யுங்கள்!
Advertisement
Advertisement