எல்லையில் இந்திய விமானப்படை பயிற்சி; பீதியில் பாகிஸ்தான்

3


புதுடில்லி: எல்லையில் இந்திய விமானப்படை பயிற்சியில் ஈடுபடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பீதியடைந்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகே, இந்தியாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் பாகிஸ்தானுக்கு அச்சத்தை கொடுத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், முன்னெப்போதும் இல்லாத வகையில் எல்லையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், வரும் செப்டம்பர் 21ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதி வரை சுமார் 17 நாட்கள் ராணுவ பயிற்சியில் ஈடுபடுவதற்காக, நோட்டம் அறிவிப்பை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.

ஜெய்சால்மர்-பார்மர்-பலோடி-ஜோத்பூர் செக்டார் மற்றும் நல்-பிகானீர் பகுதிகளை உள்ளடக்கிய வான்வெளியில் சுமார் 40,000 அடி உயரம் வரை இந்திய விமானப்படை வீரர்கள் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இந்தப் பகுதி, சர்வதேச எல்லையிலிருந்து சுமார் 20 கி.மீ., தொலைவிற்கு அருகில் உள்ளது.

இந்திய விமானப்படையின் இந்த அறிவிப்பு, பாகிஸ்தானுக்கு பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை ஆய்வு செய்யவும், கண்காணிக்கவும், பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளின் அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளது.

Advertisement