பெத்தி செமினார் பள்ளியில் ஆசிரியர் தின விழா
புதுச்சேரி: புதுச்சேரி பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி – கடலுார் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் ஆசிய கிறிஸ்தவ ஆய்வுகளுக்கான எஸ்காண்டே இருக்கையின் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஜோனாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பள்ளியின் முதல்வர் அருட்தந்தை அரோக்கியராஜ் தலைமை தாங்கினார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளியில் 8வது முதல்வராக பணியாற்றிய அருட்தந்தை எஸ்காண்டே பியர் எட்டியெனின் அயராத உழைப்பு, சிறப்பான அர்ப்பணிப்பு மற்றும் ஆன்மிக வழிகாட்டுதலைப் போற்றும் வகையில், பள்ளி வளாகத்தில் அவரது சிலை அமைக்கப்பட்டது.
பள்ளிக் கட்டணத்தைச் செலுத்துவதில் சிரமம் எதிர்கொள்ளும் மாணவர்கள் கல்வியைத் தொடர்ந்து பயில உதவும் வகையில், பள்ளியின் முதல்வர் அரோக்கியராஜ் ‘எஸ்காண்டே கல்வி நிதி’ திட்டத்தை துவக்கி வைத்தார்.
விழாவில், பள்ளியின் துணை முதல்வர் சின்னப்பன், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.