தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பியால் மக்கள் அச்சம்

முதுகுளத்துார்:முதுகுளத்துார் செல்லிஅம்மன் கோயில் தெருவில் எட்டித்தொடும் உயரத்தில் தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பியால் மக்கள் அச்சப்படுகின்றனர்.

முதுகுளத்துார் பேரூராட்சி 6வது வார்டுக்குட்பட்ட செல்லிஅம்மன் கோயில் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு முதுகுளத்துார் துணைமின் நிலையத்திலிருந்து கடந்த பலஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்கம்பத்தின் வழியாக மின்வினியோகம் செய்யப்படுகிறது.இங்கு உயரழுத்த மின்கம்பி எட்டித்தொடும் தூரத்தில் தாழ்வாக செல்வதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.இவ்வழியே ஏதாவது பொருட்கள் கொண்டு செல்வதற்கே சிரமப்படுகின்றனர். மின்விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றியும், உயரழுத்த மின்கம்பியை உயர்த்தி கட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement