42 தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

ஆத்துார்:ரேபிஸ் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க, தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி, ஆத்துார் நகர் பகுதியான ரயில்வே ஸ்டேஷன், காந்தி நகர், ராஜாஜி காலனி பகுதிகளில் ஆத்துார் நகராட்சி, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் நடந்தது.

அதில் நகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள், தெரு நாய்களை வலை மூலம் பாதுகாப்பாக பிடித்தனர். அதன்படி, 42 நாய்களுக்கு, கால்நடை மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர்.

Advertisement