ரயிலில் இருந்து விழுந்த அசாம் வாலிபர் பலி

சேலம்:கிருஷ்ணகிரி மாவட்டம் காகங்கரை - சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே ஆண் சடலம் கிடப்பதாக தகவல் வந்தது. சேலம் ரயில்வே போலீசார், அங்கு சென்று பார்த்தபோது, தலையின் பின் பகுதியில் பலத்த அடிபட்டு, இடுப்பு சிதைந்து, உடலில் ஆங்காங்கே சிராய்ப்பு காயங்களுடன் கிடந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றினர்.

அவரது பேன்ட் பாக்கெட்டில், துண்டு சீட்டில் எழுதப்பட்டிருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டதில், இறந்தவர், அசாம் மாநிலம் சோனித்பூரை சேர்ந்த மானுவெல்டேனி என தெரிந்தது. கேரள மாநிலம் திருச்சூரில் தங்கி, அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்ததும், ரங்கியா ஸ்டேஷனில் ஏறி, திருச்சூர் புறப்பட்டவர், ரயிலில் இருந்து தவறிவிழுந்து இறந்தது தெரிந்தது. அவரது சடலத்தை, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடக்கிறது.

Advertisement