பெயருடன் பிறப்பு சான்று பெற கால அவகாசம்
சிவகங்கை, செப்.6-–
கடந்த 2000 ம் ஆண்டுக்கு முன், பின் பிறந்தவர்கள் பெயருடன் கூடிய பிறப்பு சான்று பெற செப்., 26 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சிவகங்கை கலெக்டர் ஆகாஷ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, கடந்த 2000 ம் ஆண்டிற்கு முன், பின் பிறந்தவர்களின் பெயரை பிறப்பு பதிவேட்டில் பதிந்தும், பெயரை சேர்க்காதவர்கள் செப்., 26 க்குள் பிறப்பு பதிவேட்டில் பெயரை சேர்த்து பிறப்பு சான்று பெற்றுக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இம்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிறப்பு பதிவேட்டில் பெயரை பதிவு செய்து, பெயருடன் கூடிய சான்றினை அந்தந்த பிறப்பு பதிவு அதிகாரியிடம் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
///
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement