குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் அருகே செயின் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

வடலுார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர், கடந்த ஜூலை 17 ம் தேதி விருத்தாசலம் நோக்கி ஸ்கூட்டரில் சென்றபோது, அவரிடமிருந்து  3 சவரன் செயினை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்து கொண்டு பைக்கில் தப்பினர்.

இது குறித்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம்  போலீசார் வழக்குப் பதிந்து திருப்பூர் பகுதியை சேர்ந்த ராக்கி (எ) சபரிநாதன், 23; உட்பட 4 பேரை  கைது செய்தனர்.

ராக்கி  மீது ஏற்கனவே 14 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரது குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., விவேகானந்த சுக்லா பரிந்துரையை ஏற்று ராக்கியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார்.

அதற்கான உத்தரவு நகலை கடலுார் மத்திய சிறையில் உள்ள ராக்கியிடம் மந்தாரக்குப்பம் போலீசார் வழங்கினர்.

Advertisement