தொழில் முனைவோர் பயிற்சி

கடலுார்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பிளஸ் தொண்டு நிறுவனம் சார்பில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

நியூ லுக் ஹெர்ப்ஸ் நிறுவன நிறுவனர் ஜீவிதா, தொழில் முனைவோருக்கு பயிற்சி அளித்தார். அண்ணாமலைப்  பல்கலைக்கழக பொறியியல் புல முதல்வர் சரவணன், தலைமைச் செயல் அலுவலர் கார்த்திக், பிளஸ் தொண்டு நிறுவன நிறுவனர் அந்தோணிசாமி ஆகியோர், பயிற்சி முடித்த தொழில் முனைவோருக்கு சான்றிதழ் வழங்கினர்.

உணவு சார்ந்த தொழில்கள், உணவு பொருள் மதிப்புக்கூட்டல், அழகு சாதனப் பொருள் தயாரிப்பு உள்ளிட்ட குறைந்த முதலீட்டில் தொடங்கக் கூடிய பல்வேறு தொழில் வாய்ப்புகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும், தொழில் திட்டமிடல், நிதி ஆதாரங்கள் மற்றும் தொழில் வளர்ச்சி குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. 

Advertisement