ரேஷனில் விற்று தீர்ந்தது வெங்காயம்: கூடுதலாக 1,000 டன் கேட்கும் தமிழகம்
சென்னை: ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்ட வெங்காயம் விற்பனையாகி விட்டதால், மத்திய அரசிடம் கூடுதலாக, 1,000 டன் வெங்காயத்தை தமிழக அரசு கேட்டுள்ளது.
தமிழகத்தில் வெங்காயம் விளைச்சல் குறைந்துள்ளது. எனவே, மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து எடுத்து வந்து, தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. அம்மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், கிலோ வெங்காயம், 60 - 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே, வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த, ரேஷன் கடைகளில் விற்க, தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்காக, மத்திய அரசிடம் இருந்து முதல் கட்டமாக, 910 டன் வெங்காயத்தை, தமிழக நுகர்வோர் கூட்டுறவு இணையம் வாங்கியது. இந்த வெங்காயத்தை, தமிழகத்தில் நகர்ப்புறங்களில் உள்ள, 8,914 ரேஷன் கடைகளில் கிலோ, 35 ரூபாய்க்கு விற்பனை செய்யும் பணி, செப். 3ம் தேதி முதல் தொடங்கியது.
ஒரு கடைக்கு சராசரியாக, 50 கிலோ வெங்காயம் அனுப்பப்பட்டு, தலா ஒரு கார்டுதாரருக்கு, ஒரு கிலோ வீதம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பெரும்பாலான கடைகளில் வெங்காயம் முழுதுமாக விற்று தீர்ந்து விட்டது. எனவே, மேலும் வெங்காயம் வாங்கப்பட உள்ளது. கூடுதலாக, 1,000 டன் வெங்காயத்தை மத்திய அரசின் கூட்டுறவு அமைப்புகளிடம், தமிழக கூட்டுறவு துறை கேட்டுள்ளது. இந்த வெங்காயம் வந்ததும், ரேஷன் கடைகளில் தொடர்ந்து விற்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும், மொத்தமாக 1 கிலோ கொடுக்காமல், 100 கிராம் முதல் 250 கிராம் வரை, குடும்ப உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல், வெங்காயம் கொடுத்திருந்தால், அனைவருக்கும் கிடைத்திருக்கும். அடுத்த 1000 டன் வந்தவுடன் மீண்டும் மீண்டும் வரத்திற்கு ஏற்றாற்போல் கொடுக்கலாம்.
மத்திய அரசிடம் வாங்க வேண்டியது இவர்கள் Sticker ஒட்ட வேண்டியது. இவர்களுக்கு வரும் வரியை இலவசமாக கொடுக்க வேண்டியது
வெங்காயத்தை மானிய விலையில் வழங்குவதோ மத்திய அரசு. ஆனால் மலிவு விலை வெங்காயத்தை மாநில அரசு ரேஷன் கடைகளில் வழங்குவதாக செய்தி ஊடகங்கள்?
வெங்காய மண்ணில் வெங்காயம் தட்டுப்பாடு
ஜாக்கிரதை. ஒரு சில தில்லுமுல்லு வியாபாரிகள், ரேஷனில் வாங்கி, அதையே வெளியில் இரண்டு மடங்கு விலை ஏற்றி விற்பார்கள். அப்படிப்பட்டவர்கள் மீது ஒரு கண், இல்லை இல்லை, இரண்டு கண்ணையும் வைத்து கண்காணிக்கவும். தேவைப்பட்டால் கேமரா மூலம் கண்காணிக்கவும். ஒரு சில திருந்தாத ஜென்மங்கள் உண்டு நம்மிடையே. ஜாக்கிரதை.
வெங்காயத்தால் ஆட்சியே கலைந்த வரலாறு உள்ளது.
தருவாங்க. ஆனா ரேஷன் கடைகளில் இங்கு வழங்கப்படும் அரிசி பருப்பு, வெங்காயம் உபயதாரர் மத்திய அரசுன்னு போர்டு வெச்சு பிரதமரின் போட்டோ வைப்பீங்களா?.மேலும்
-
கோபால்சுவாமி கோவிலில் உறியடி விழா கோலாகலம்
-
சமூக நீதி, நலத்திட்ட செயல்திறன் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆய்வு
-
பாலம் அமைக்கும் பணிகள் தாமதம் மக்கள், மாணவர்கள் தவிப்பு
-
பள்ளியில் ஆசிரியர் தின விழா பரிசு வழங்கிய மாணவர்கள்
-
விபத்தை தவிர்க்க ஓட்டுநர்கள் கவனமாக இருக்கணும்! முக்கிய 'ஸ்பாட்'களில் போலீசார் ஆய்வு
-
மூடுகால்வாயில் விஷவாயு தாக்கம் அடைப்பை நீக்க பணியாளர்கள் அச்சம் வேளச்சேரிக்கு வெள்ள அபாயம்