பள்ளிகளில் ஆசிரியர் தின விழா
புதுச்சேரி: புதுச்சேரி, கல்வே காலேஜ் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் துணை முதல்வர் சித்ரா மற்றும் தலைமை ஆசிரியர் உஷா ஆகியோர் அனைத்து ஆசிரியர்களுக்கும் சால்வை அணிவித்து கவுரவித்தார்.
ஆசிரியர் தினத்தையொட்டி, மாணவர்களின் கவிதைகள், சொற்பொழிவுகள், சிலம்பாட்டம், தபேலா இசை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தலைமை ஆசிரியர் வீரய்யன், அனைத்து ஆசிரியர்களுக்கும் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். ஆசிரியர் பாலகுமார் நன்றி கூறினார்.
பெரியார் நகர் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி தலைமையில் ஆசிரியர் தின விழா நடந்தது. ஆசிரியர்கள் பிரேமலதா ஷர்மிளா கிரேசி, சகாய தீபக்குமாரி, ஜெயசுதா, புஷ்பவல்லி, சத்தியகலா, எலிசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா பள்ளி நிர்வாகி சம்பத் தலைமையில் நடந்தது. பள்ளி துணை முதல்வர் சுசிலா சம்பத் முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குனர் ஹரிஷ் குமார் வரவேற்றார். பாரதி நர்சிங் கல்லுாரி முதல்வர் சங்கீதா வாழ்த்தி பேசினார். விழாவில், பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிர்வாக இயக்குனர் மோகன்குமார் நன்றி கூறினார்.
செட்டிப்பட்டு அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தாஜூதீன் அலி அகமது தலைமையில் ஆசிரியர் தின விழா நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரமேஷ், அனைத்து ஆசிரியர்களுக்கும் சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கினார்.
சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழா தலைமை ஆசிரியர் சுசீலா சம்பத் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ஹரிஷ் குமார் முன்னிலை வகித்தார். விழாவில், பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிர்வாக இயக்குநர் மோகன் குமார் நன்றி கூறினார்.
மேலும்
-
கோபால்சுவாமி கோவிலில் உறியடி விழா கோலாகலம்
-
சமூக நீதி, நலத்திட்ட செயல்திறன் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆய்வு
-
பாலம் அமைக்கும் பணிகள் தாமதம் மக்கள், மாணவர்கள் தவிப்பு
-
பள்ளியில் ஆசிரியர் தின விழா பரிசு வழங்கிய மாணவர்கள்
-
விபத்தை தவிர்க்க ஓட்டுநர்கள் கவனமாக இருக்கணும்! முக்கிய 'ஸ்பாட்'களில் போலீசார் ஆய்வு
-
மூடுகால்வாயில் விஷவாயு தாக்கம் அடைப்பை நீக்க பணியாளர்கள் அச்சம் வேளச்சேரிக்கு வெள்ள அபாயம்