வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1.74 லட்சம் மோசடி

சாத்துார்:வெம்பக்கோட்டை அன்னபூரணியாபுரத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் கோடீஸ்வரன் 25. பி.இ. படித்துவிட்டு மாலத்தீவில் ஸ்டோர் கீப்ராக பணிபுரிந்து வந்த போது அங்கு பர்மாவை சேர்ந்த வின்மீன் ஆங்க் என்பவர் பழக்கமானார். பின்னர் ஸ்டோர் கீப்பர் வேலையை உடல்நல குறைவால் விட்டுவிட்டு கோடீஸ்வரன் சொந்த ஊர் திரும்பினார்.

இந்த நிலையில் அவரை அலைபேசியில் தொடர்பு கொண்ட வின்மீன் ஆங்க், கனடாவில் ஒரு நிறுவனத்தில் வேலை காலியாக இருப்பதாகவும் அதற்கு விசா டிக்கெட் அனுப்ப பணம் அனுப்பும்படி கூறியுள்ளார். இதனை நம்பிய கோடீஸ்வரன் அவர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு ரூ 1,74,000பணம் அனுப்பி உள்ளார். இதன் பின்னர் வின்மீன் ஆங்க் தொடர்பு கொள்ள முடியவில்லை. கோடீஸ்வரன் போலீசில் புகார் செய்துள்ளார்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement