மலேசியாகாரருக்கு அரிவாள் வெட்டு: கூலிப்படையை சேர்ந்த இருவர் கைது
மதுக்கரை:கோவை நவக்கரை அருகேயுள்ள பாரத் பெட்ரோல் பங்கிற்கு, கடந்த, 2ம் தேதி மலேசியாவை சேர்ந்த லோகனாதன், 52 குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் வேன் ஒன்றில் வந்தனர். கும்பல் ஒன்று வேன் கண்ணாடியை அரிவாளால் வெட்டியது. தொடர்ந்து வேனிற்குள் நுழைந்து அங்கிருந்தோரை வெட்ட முயன்றது. இதில், லோகனாதன் அவரது மகன் யுகேந்திரன், 21 ஆகியோருக்கு காயமேற்பட்டது.
விசாரணையில், பரமக்குடி, சிவகங்கை பகுதிகளை சேர்ந்த கூலிப்படை கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்நிலையில் கோவையில் பதுங்கியிருந்த, மானாமதுரை, மிளகனுார், பெருமாள் நகரை சேர்ந்த சசிகுமார் மகன் ஆகாஷ், 20 உள்ளிட்ட கூலிப்படையினர் இருவர் சிக்கினர்.
தொடர்ந்து ஆகாஷ், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement