மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் 

சிதம்பரம்: மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், சிதம்பரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் செப் 8 ல் நடக்கிறது.

கடலுார் மின் பகிர்மான வட்டம், சிதம்பரம் கோட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில், மாதாந்திர மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் செப் 8 ல் சிதம்பரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.

இக்கூட்டத்தில், சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள நகர்புற பகுதிகளான அண்ணாமலை நகர், சி.முட்லுார், கிள்ளை, பிச்சவாரம், பு.முட்லுார், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீத்தாம்பாளையம், சாமியார்பேட்டை, வயலாம்பூர், பூவாலை, புவனகிரி, குறியாமங்களம், சாத்தப்பாடி, கீரப்பாளையம், அம்மாபேட்டை, வல்லம்படுகை, வக்கராமாரி, கருப்பூர், குமராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சார்ந்த மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது மனுக்களை அளித்து தீர்வு காணலாம்.

Advertisement