இலவச முதுகு தண்டுவடம் சிறப்பு சிகிச்சை முகாம்
விருத்தாசலம்: விருத்தாசலம் மேற்கு கோட்டை வீதியில் உள்ள ஏ.எம்.சி., மருத்துவமனையில், எலைட் ரோட்டரி சங்கம், புதுச்சேரி விநாயகா மிஷன்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியன சார்பில், இலவச நரம்பியல், மூளை மற்றும் முதுகு தண்டுவடம் சிறப்பு சிகிச்சை முகாம் நடந்தது.
முகாமிற்கு, எலைட் ரோட்டரி சங்க தலைவர் பிரபு தலைமை தாங்கினார்.
டாக்டர் செல்வம், முன்னாள் மாவட்ட ஆளுநர் விஸ்வேஸ்வரன், உதவி ஆளுநர் விருதகிரி முன்னிலை வகித்தனர்.
ரோட்டரி செயலாளர் ரமேஷ்பாபு வரவேற்றார்.
டாக்டர்கள் செல்வம், சந்தோஷ் ராஜகாந்தி, வேலரசன், வினோத் கண்ணன், ஆசைத்தம்பி வாழ்த்துரை வழங்கினர்.
ரோட்டரி நிர்வாகிகள் வெங்கடேசன், மாணிக்கம், டாக்டர் சேதுராமன், சுவாமிஜி, குருசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மருத்துவ முகாமில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
பொருளாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.