டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது 

விருத்தாசலம்: மதுபாட்டில் விற்ற வாலிபரை, மதுவிலக்கு அமல்பிரிவு  போலீசார் கைது செய்தனர். 

பெண்ணாடம் பகுதியில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்யப்படுவதாக, விருத்தாசலம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், நேற்று பெண்ணாடம் பகுதியில் மதுவிலக்கு போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பெண்ணாடம் பஸ் நிலையம் அருகே, சோழன் நகரை சேர்ந்த ஸ்டாலின், 32; என்பவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, ஸ்டாலினை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த, 22 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

Advertisement