இளம் பெண் கர்ப்பம் வாலிபர் கைது
விருத்தாசலம்: திருமணம் செய்து கொள்வதாக கூறி, இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கம்மாபுரம் அடுத்த சூ.கீணனுார் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ், 22, என்ற வாலிபருடன் சமூக வலைதளம் மூலம் பழகி காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், விக்னேஷ் அந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி கற்பழித்துள்ளார். இதனால், அந்த இளம்பெண் தற்போது கற்பமாக உள்ளார்.
இந்நிலையில், அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, விக்னேஷிடம் கேட்டுள்ளார். அப்போது, விக்னேஷ் திருமணத்திற்கு மறுத்துள்ளார்.
இதுகுறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து, விக்னேஷை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement