பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்

நெட்டப்பாக்கம்: சொரப்பூர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம் நேற்று மாலை நடந்தது.

நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் உள்ள கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியொட்டி, உறியடி உற்சவம் நடந்தது. இதையொட்டி காலை பெருமாளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, 10:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு உறியடி உற்சவம் நடந்தது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement