தி.மு.க., மறுசீரமைப்பு செயற்குழுக் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மறுசீரமைப்பு செயற்குழுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்கினார். தலைமைக் கழக பிரதிநிதிகள் சிவா, வீரமணி ஆகியோர் ஆலோசனை வழங்கினர். மாவட்ட அவை தலைவர் ஜெயச்சந்திரன், துணை செயலாளர்கள் முருகன், கற்பகம், மாநில மகளிரணி பிரசாரகுழு செயலாளர் தேன்மொழி.

தலைமை கழக வழக்கறிஞர் சுரேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், அப்துல் சலாம், பொதுக்குழு உறுப்பினர்கள் ஏழுமலை உட்பட ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், வரும் 15ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள தி.மு.க., முப்பெரும் விழாவில் விழுப்புரம் தெற்கு மாவட்டம் சார்பில், மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமையில் திரளாக பங்கேற்பது.

தி.மு.க., முப்பெரும் விழாவை, தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைகள், பேரூர், நகர, ஒன்றியங்கள் சார்பில் அந்தந்த பகுதிகளில் சிறப்பாக கொண்டாடுவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Advertisement