கணவர் மாயம் மனைவி புகார்
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே வீட்டை விட்டு வெளியே சென்ற கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
மங்கலம்பேட்டை அடுத்த பள்ளிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜா, 40; இவரது மனைவி பானுமதி, 29; இருவருக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆன நிலையில், 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற சின்னராஜா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வீட்டிற்கு திரும்பினார்.
கடந்த, 2ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மனைவி பானுமதி கொடுத்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து சின்னராஜாவை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோபால்சுவாமி கோவிலில் உறியடி விழா கோலாகலம்
-
சமூக நீதி, நலத்திட்ட செயல்திறன் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆய்வு
-
பாலம் அமைக்கும் பணிகள் தாமதம் மக்கள், மாணவர்கள் தவிப்பு
-
பள்ளியில் ஆசிரியர் தின விழா பரிசு வழங்கிய மாணவர்கள்
-
விபத்தை தவிர்க்க ஓட்டுநர்கள் கவனமாக இருக்கணும்! முக்கிய 'ஸ்பாட்'களில் போலீசார் ஆய்வு
-
மூடுகால்வாயில் விஷவாயு தாக்கம் அடைப்பை நீக்க பணியாளர்கள் அச்சம் வேளச்சேரிக்கு வெள்ள அபாயம்
Advertisement
Advertisement