ஏரியில் கொட்டிய 2 டன் அழுகிய ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள்

காரிமங்கலம்: தர்மபுரி அருகே, குண்டலப்பட்டி ஏரியில், 2 டன் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் கொட்டிவிட்டு சென்றவர்கள் குறித்து, வரு-வாய்துறை மற்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா, பைசுஹள்ளி பஞ்., குண்டலப்பட்டி ஏரி, 75 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரி சுற்றுவட்டார பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வந்-தது. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாத நிலையில், ஏரி நீர் இல்லாமல் வறண்டுள்ளது. இந்த ஏரியில் ஏற்-கனவே குப்பை, கட்டடக்கழிவுகள் கொட்டப்பட்டு வரும் நிலையில், நேற்று அதிகாலை மர்ம நபர்கள், அரசால் தடை செய்-யப்பட்ட அழுகிய ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை கொட்டி விட்டு சென்றுள்ளனர். அழுகிய மீன்களில் இருந்து வெளியேறிய துர்நாற்றம் குறித்து, அப்பகுதி மக்கள் பஞ்., நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, காரிமங்கலம் தாசில்தார் சிவகுமார் மேற்பார்-வையில் வி.ஏ.ஓ., முருகன் பஞ்., செயலாளர் குமார் மற்றும் பொதுப்பணித்துறையினர் ஏரியில் பொக்லைன் இயந்திரம் மூலம், குழி தோண்டப்பட்டு ஏரியில் கொட்டப்பட்டிருந்த, 2 டன் அளவிலான மீன்களை, கிருமி நாசினி தெளித்து மூடினர். இதில், தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்ப்பு மற்றும் ஏரியில் கொட்டி விட்டு சென்றவர்கள் குறித்து, வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் விசாரித்து வரு-கின்றனர்.

Advertisement