எல்.ஐ.சி., முகவர் தின விழா
கடலுார்: கடலுாரில் எல்.ஐ.சி., முகவர் தின விழா கூட்டம் நடந்தது.
தென்மண்டல எல்.ஜ.சி. அசோசியேட் கோமதிநாயகம் தலைமை தாங்கி ‘நமது நிறுவனம்–நமது பெருமை’ என்ற தலைப்பில் பேசினார்.
ஜோதிலட்சுமி வரவேற்றார். கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து முகவர்களுக்கும் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். ‘முகவரின் குரல்’ என்ற தலைப்பில் ஸ்ரீதேவி, ஜெயசித்ரா, கீதா, வள்ளிநாயகம் ஆகியோர் பேசினார்.
எல்.ஜ.சி., யின் 70ம் ஆண்டில் புதிய திட்டங்களான பீமா பிளாட்டினம்,. ஜீவன் ரக்ஷா திட்டம் குறித்து ஊமைதுரை, ஆனந்தன் வேணுகோபால், விஜயகுமார் ஆகியோர் விளக்க உரையாற்றினர். ஏற்பாடுகளை முகவர்கள் ரவிச்சந்திரன், சுரேஷ், தண்டபாணி செய்திருந்தனர்.
உமா நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement