கும்பாபிஷேகம்

நெல்லிக்குப்பம்: விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நெல்லிக்குப்பம், வான்பாக்கம் விநாயகர் கோவில் திருப்பணிகள் முடிந்து கடந்த 5 ம் தேதி கணபதி மற்றும் நவக்கிரக ஹோமம் நடந்தது. அன்று மாலை முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தன.

நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, ,பூர்ணாஹீதி, தீபாராதனை நடந்தது. கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து விநாயகர், பாலசுப்ரமணியர், இடும்பன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இரவு சுவாமி வீதி உலா நடந்தது.

Advertisement