போலீஸ் செய்தி
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1.74 லட்சம் மோசடி
சாத்துார்: வெம்பக்கோட்டை அன்னபூரணியாபுரத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் கோடீஸ்வரன் 25. பி.இ. படித்துவிட்டு மாலத்தீவில் ஸ்டோர் கீப்ராக பணிபுரிந்து வந்த போது அங்கு பர்மாவை சேர்ந்த வின்மீன் ஆங்க் என்பவர் பழக்கமானார். பின்னர் ஸ்டோர் கீப்பர் வேலையை உடல்நல குறைவால் விட்டுவிட்டு கோடீஸ்வரன் சொந்த ஊர் திரும்பினார்.
இந்த நிலையில் அவரை அலைபேசியில் தொடர்பு கொண்ட வின்மீன் ஆங்க், கனடாவில் ஒரு நிறுவனத்தில் வேலை காலியாக இருப்பதாகவும் அதற்கு விசா டிக்கெட் அனுப்ப பணம் அனுப்பும்படி கூறியுள்ளார். இதனை நம்பிய கோடீஸ்வரன் அவர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு ரூ 1,74,000பணம் அனுப்பி உள்ளார். இதன் பின்னர் வின்மீன் ஆங்க் தொடர்பு கொள்ள முடியவில்லை. கோடீஸ்வரன் போலீசில் புகார் செய்துள்ளார்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் தாய் பலி: மகன் காயம்
திருச்சுழி: அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ராஜலட்சுமி, 60, இவரது மகன் தங்கபாண்டி, 45, இவர் தனது தாயுடன் டூ வீலரில் நேற்று மாலை 6:50 க்கு நரிக்குடியிலிருந்து அருப்புக்கோட்டைக்கு வந்தார். பள்ளி மடம் அருகே வந்த போது, கட்டுபாட்டை இழந்த வாகனம் அருகில் உள்ள பனை மரத்தில் மோதியதில், சம்பவ இடத்திலேயே ராஜலட்சுமி பலியானார். காயமடைந்த தங்கப்பாண்டி திருச்சுழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். , திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.
பஸ் ஸ்டாண்டில் ஆண் உடல்
ராஜபாளையம்: ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்டில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்த நிலையில் கிடந்தார். வடக்கு போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்ததில் ஆவாரம் பட்டியை சேர்ந்த சின்னசாமி என தெரிந்தது. குடும்பத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்து, கிடைக்கும் வேலையை செய்து பஸ் ஸ்டாண்டில் தங்கி வந்துள்ளார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டாசு பறிமுதல்
சிவகாசி: எம்.மேட்டுப்பட்டி ஆத்து மேட்டு தெருவை சேர்ந்தவர் கண்ணன் 45. இவர் அதே பகுதியில் தகர செட்டில் மிஷின் திரி வைக்கப்பட்ட ஷாட் வெடிகுழாய்கள் பதுக்கி வைத்திருந்தார். எம்.புதுப்பட்டி போலீசார் அவரை கைது செய்து ரூ. 18 ஆயிரத்து 400 பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.