துப்பாக்கி சுடும் போட்டி ஆவடி கமிஷனர் அசத்தல்

ஆவடி: மாநில அளவில் காவல் துறை கண்காணிப்பாளர், உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கான துப்பாக்கி சுடும் போட்டிக்கான தகுதிச்சுற்று, கடந்தாண்டு நடந்தது.

இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான இறுதிச்சுற்று போட்டிகள், சென்னை, ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ படை தலைமையகம், மருதம் வளாகத்தில் நேற்று நடந்தது. 10, 15, 20 மற்றும் 25 யார்ட்ஸ் 'பிஸ்டல்' மற்றும் 50 யார்ட்ஸ் 'ரைப்பிள்' துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது.

தமிழக டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் உட்பட காவல் துறை உயரதிகாரிகள் பலர் பங்கேற்று, துப்பாக்கி சுடும் திறனை வெளிப்படுத்தினர்.

இதில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கான இறுதிச்சுற்று போட்டியில், ஆவடி போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், சிறப்பாக செயல்பட்டு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இதற்கான கோப்பையை, தமிழக டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால், ஆவடி போலீஸ் கமிஷனர் செந்தில்குமாருக்கு வழங்கி பாராட்டினார்.

Advertisement