6,981 வழக்குகளில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறல்

சென்னை: திருட்டு, வழிப்பறி, கொள்ளை, செயின்பறிப்பு உள்ளிட்ட, குற்ற சம்ப வங்கள் தொடர்பாக, 6,981 வழக்குகளில், துப்பு துலக்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.

தமிழகத்தில், நடப்பாண்டில், ஜன., - ஆக., வரை, 4,013 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. அதேபோல், வீடு புகுந்து திருடுதல், செயின் பறிப்பு, கொள்ளையடித்தல், வழிப்பறி என, 2,800க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

இது தொடர்பாக, மாநிலம் முழுதும் உள்ள காவல் நிலையங்களில், 13,924 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், 6,981 வழக்குகள் மீது, துப்பு துலக்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.

இது குறித்து, போலீஸ் அதிகரிகள் கூறுகையில், 'நடப்பாண்டில், ஆக., வரை, 6,943 வழக்குகளில் விசாரணை முடித்து, குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

'மீதமுள்ள வழக்குகள் தொடர் விசாரணையில் உள்ளன. அதில் தொடர்புடைய நபர்கள் விரைந்து கைது செய்யப்படுவர்' என்றனர்.

Advertisement