துாய்மை பணியாளர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி: தர்மபுரி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, சி.ஐ.டி.யு., தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை தொழிலாளர்கள் சங்-கத்தின் சார்பில், நகராட்சி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் சேகர் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாநில துணைத்தலைவர் நாகராசன், மாவட்ட துணைத்தலைவர் குட்டியப்பன், மாவட்ட பொருளாளர் சத்யா உட்பட பலர் பேசினர். இதில், தர்மபுரி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துாய்மை பணியாளர் களுக்கு மாவட்ட கலெக்டரால், முறைசாரா தொழிலாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்படுகிற தினக்-கூலியை, 2024-ம் ஆண்டிலிருந்து வழங்காமல், நகராட்சி நிர்-வாகம் மறுத்து வருகிறது.ஒப்பந்தத்தின்படி, நிர்ணயித்த தினக்கூலியை ஆக., மாதத்திலி-ருந்து சம்பளமாகவும், ஏப்., முதல் நிலுவைத் தொகை வழங்கப்-படும் என்பதை நிறைவேற்றவில்லை. எனவே, துாய்மை பணியா-ளர்களுக்கு நிர்ணயம் செய்த, 541 ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற மறுக்கும், தர்மபுரி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், 2024 முதல் வழங்க வேண்-டிய தினக்கூலி நிலுவைத்தொகையை வழங்க வேண்டுமென, ஆர்ப்பாட்டத்தில்
வலியுறுத்தப்பட்டது.