வரும் 30க்குள் வரி செலுத்த குடிநீர் வாரியம் வேண்டுகோள்

சென்னை: குடிநீர் வாரியத்தில், 2026 - 27ம் ஆண்டின், முதல் அரையாண்டுக்கான குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணம், ஏப்., முதல் செப்., மாதத்திற்குள் செலுத்த வேண்டும்.

வரி, கட்டணத்தை அனைத்து பகுதி அலுவல கங்களில் காசோலை, வரைவோலை, அந்த அலுவலகங்களில் உள்ள க்யூ.ஆர்., குறியீடு மற்றும் https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற வலைதளம் மூலமாகவும் செலுத்தலாம்.

நுகர்வோர், இம்மாதம் 30ம் தேதிக்குள், நிலுவை தொகையை செலுத்தி, அபராதத்தை தவிர்க்க வேண்டும் என, சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement