கனிமங்கள் கடத்தல்: 5 லாரிகள் பறிமுதல்
பாகலுார்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து, கர்நாடகாவிற்கு கனிமங்கள் கடத்தப்படுகிறது.
இந்நிலையில், ஓசூர் அடுத்த பாகலுார் அருகே தேவீரப்பள்-ளியில், சாட்டிலைட் டவுன் ரிங்ரோட்டில், பாலிகானப்பள்ளி வி.ஏ.ஓ., பிரபாகரன் மற்றும் வருவாய்த்துறையினர் வாகன சோதனை செய்தனர். அப்போது, உத்தனப்பள்ளியிலிருந்து கர்நா-டகாவிற்கு, 4 லாரிகளில் தலா, 4 யூனிட் ஜல்லி மற்றும் எம்.சாண்ட் ஆகியவற்றை, கடத்தி செல்வது தெரிந்தது. லாரி-களை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாகலுார் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
வி.ஏ.ஓ., பிரபாகரன் புகார் படி, தர்மபுரி மாவட்டம், நல்லம்-பள்ளி அருகே தடங்கம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள், 36, என்பவரை போலீசார் கைது செய்தனர். மற்ற, 3 லாரிகளின் டிரைவர்கள், உரிமையாளரை தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி அடுத்த பர்கூர் அருகே தண்ணீர் பள்ளம் பகுதியில், சிகரலப்பள்ளி வி.ஏ.ஓ., ஜெயப்பிரகாஷ் மற்றும் அதிகாரிகள், நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர்.
அப்போது, தண்ணீர்பள்ளத்திலிருந்து, காட்டூர் கிராமத்திற்கு டிப்பர் லாரியில், 3 யூனிட் மண்ணை கடத்தி செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், பர்கூர் ஸ்டேஷனில் ஒப்-படைத்தனர். வி.ஏ.ஓ., புகார் படி, லாரி டிரைவர், உரிமையா-ளரை போலீசார் தேடி வருகின்றனர்.