டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு
அரூர்: அரூர், வட்டார மருத்துவ அலுவலர் அழகரசன் மேற்பார்-வையில், மருத்துவர் பரத்வாஜ் தலைமையில், சுகாதார ஆய்வா-ளர்கள் வடிவேல், சீனிவாசன், கஜபதி ஆகியோர் கொங்க-வேம்பு பஞ்.,க்கு உட்பட்ட கொங்கவேம்பு, எஸ்.பட்டி, வாதாப்பட்டி, பாரதிபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பின், வீடுகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்-பட்டது. வீடுகளில் தண்ணீர் சேமித்து வைத்துள்ள டேங்க், பேரல்கள் ஆகியவற்றில் ஆய்வு செய்யப்பட்டு டெங்கு கொசு புழுக்கள் அழிக்கப்பட்டு தண்ணீரில் குளோரினேசன் செய்யப்பட்-டது.மேலும், குடியிருப்பு பகுதி களை துாய்மையாக வைப்பதுடன், தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைத்துக் கொள்ளவும், குடிநீரை காய்ச்சி வைத்து குடிக்கவும் அறிவுறுத்-தப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு, டெங்கு காய்ச்சலை தடுப்ப-தற்கான வழிமுறைகள் குறித்து, விளக்கம் அளிக்கப்பட்டது.