அச்சுறுத்தும் ஒற்றை யானை
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் மலை கிராமங்களான வடகாடு, பெத்தேல்புரம், புலிக்குத்திக்காடு, சிறுவாட்டுக்காடு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஒற்றை யானை நடமாட்டம் உள்ளது.
நேற்று ஒட்டன்சத்திரம் - பாச்சலுார் ரோட்டில் புலிக்குத்திக்காடு அருகே ஒற்றை யானை நின்று கொண்டு அவ்வழியாக வாகனங்கள் செல்ல விடாமல் அச்சுறுத்தியது. சில மணி நேர காத்திருப்புக்கு பின் யானை வனத்துக்குள் சென்றதும் வாகனங்கள் புறப்பட்டு சென்றன.
இந்த ரோட்டில் இரவும் பகலும் வாகனங்கள் சென்று வருகின்றன. வனத்துறையினர் அவ்வப்போது பட்டாசுகளை வெடித்து யானையை விரட்டினாலும் சில நாட்களில் மீண்டும் வந்து விடுகிறது. ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement