பிரதோஷ வழிபாட்டில் சிவனடியார்கள் பரவசம்

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் , ஆவணி மாத இரண்டாவது பிரதோஷ வழிபாடு நடந்தது.

சிவாலயங்களில் மஹா அபிஷேக பூஜைகள் நடந்தன. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மூலவர், அதிகாரநந்தி மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு மஹா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அலங்காரபூஜை நடந்தது. வெள்ளி ரிஷப வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உமாமகேஸ்வரர், வெளிபிரகாரத்தை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி, பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், அலகுமலை ஆதிகைலாசநாதர் கோவில், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில், பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவில், அபிஷேகபுரம் ஐராவதீஸ்வரர், சாமளாபுரம் சோழீஸ்வரர், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், ஊத்துக்குளி ரோடு காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில், பிரதோஷ வழிபாடு நடந்தது. திரளான சிவனடியார்கள் பங்கேற்று சிவபெருமானை மனமுருகி வழிபட்டனர்.

Advertisement