'சில்லி சிக்கனில் செயற்கை நிறம் சேர்த்து விற்றால் உடனே அபராதம்'

கோவை: நவ. 31ம் தேதி வரை, உணவு தயாரிப்பு நிறுவனங்கள், ஓட்டல்களில் உள்ள விதிமீறல்கள், தரம் குறைவு, கலப்படம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இம்மாதம் 1-6 ம் தேதி வரை, 462 உணவு நிறுவனங்களில் ஆய்வு நடந்துள்ளது.

சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம் ரோட்டில் தனியார் மருத்துவமனை எதிரேயுள்ள ஓட்டல் ஒன்றில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்ததோடு, விதிமீறல்களில் ஈடுபட்டதால், நிரந்தரமாக செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ.95 ஆயிரம் அபராதத்தொகை அரசு கருவூலத்திற்கு செலுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ''ஓட்டல்களில் அதிக செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட சில்லி உணவு விற்கக்கூடாது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஸ்பூன், தட்டு பயன்படுத்தக் கூடாது. பெரும்பாலான தள்ளுவண்டி கடைகளில், இவற்றில் தான் சாட் அயிட்டங்கள் தருகின்றனர். பொதுமக்கள் இதை வாங்க மறுத்தாலே, மாற்றம் வரும்,'' என்றார்.

Advertisement