இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் துவக்கம்; திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர், தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். அதன்பிறகு, அவர்கள் தவெகவில் இணைந்தனர்.
அதேபோல, இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜினாமா செய்தார். இதனால், தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளைத் தவிர, எஞ்சிய தொகுதிகள் குறித்து தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்த இரு தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிமுக வசம் இருந்த இரு தொகுதிகளையும், இந்தத் தேர்தலில் போட்டியிட்டு கைப்பற்ற வேண்டும் என்று இபிஎஸ் உறுதியோடு இருக்கிறார். அதேவேளையில், இந்த இரு தொகுதிகளையும் வென்று தங்களின் பலத்தை அதிகரிக்க தவெகவும் முயற்சித்து வருகிறது.
இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய செப்., 17ம் தேதி கடைசி நாளாகும்.
செப்.,19ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்த இரு தொகுதிகளிலும் கண்காணிப்பு பணிகளை தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
@block_B@
திமுக வேட்பாளர்கள்
இதனிடையே, இடைத்தேர்தல் தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்திய நிலையில், இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. திமுக சார்பில் மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் எஸ்.சுகன்யாவும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. block_B
கடந்த 2021ம் ஆண்டு எழும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவான பரந்தாமனுக்கு, சட்டசபை பொதுத்தேர்தலின் போது வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது, இடைத்தேர்தலில் போட்டியிட அவருக்கு திமுக மீண்டும் சீட் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு வீடியோ!
மதுராந்தகம், தாராபுரத்தில் நிற்கும் திமுக வேட்பாளர்கள் யார்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
தினமலர் பிரத்யேக வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
தேர்தல் வரை களத்தில் இருப்பார்களா அல்லது அதிமுகவுக்கு விட்டு கொடுப்பார்களா என்பது புதிரே. ஒரு வேளை நின்றாலூம் டிபாசிட் தேறுமா?
Mr Stalin could have contested
திமுக நிற்கப்போவதுபோல் ஒரு Buildup தருகிறது. இறுதியில் நிற்காது. அதிமுகவிற்கு விட்டு விடும்.
மக்கள் ஆதரவுடன் ...அமோக ..." தோல்வி " அடைய வாழ்த்துக்கள் ...
இந்த இடை தேர்தலுக்கு பிறகு ... " மூன்று முறை தோல்வி " மு க ஸ்டாலின் பிறகு ...
" நான்கு முறை தோல்வி " கண்ட ஸ்டாலின் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவார் ...
Why not the dmk supremo is not contesting from either of the constituencies
அப்பாடா நான் கூட போட்டிஇயிடாமல் எஸ்கேப் ஆகி விடுவார்கள் என்று நினைத்தேன்.... எங்கள் தலைக்கு தில்லப் பார்த்தீங்களா....தீமூகா டெபாசிட் இழக்க வேண்டும்... நல்ல ஆட்சி நடத்தும் விஜய்க்கு இரண்டு வெற்றிகளை மக்கள் பரிசளிக்க வேண்டும்... அதிமுக இரண்டாவது இடம் வரட்டும்... இதுதான் தற்போதைக்கு தமிழக மக்களின் விருப்பங்கள்
தவெ க தனது சமூகத்தினரை அனைத்து குறைகளிலும் திணித்திப்பதை பார்த்தால் கொஞ்ச காலத்தில் மீண்டும் நாம் ஆங்கிலேய கிறிஸ்துவ ஆட்சிக்கு அடிமையாகிவிடுவோம் . முளையில் கிள்ளி எரிவதே சாலச்சிறந்தது .
வரலாறு காணாத தோல்வி நிச்சயம்.
அனுதாபங்கள் .
இதுவரை நடந்து முடிந்த இடைதேர்தல்கள் பெரும்பாலானவை ஆளுங்கட்சிக்கே சாதகமாய் இருந்தது வரலாறு. ஆனால் இம்முறை இருக்கும் பலமான மும்முனை போட்டியால் தவெக சிரமப்பட்டு வெல்வார்கள் என எண்ணுகிறேன். திமுகவுக்கு வாய்ப்பில்லை ராஜா. திமுக நிற்கவில்லையென்றால் அதிமுக சுலபமாக வென்று விடும்.