ஸ்கூட்டர் மோதி தொழிலாளி பலி

அன்னூர்: வடக்கலூரை சேர்ந்தவர் குமாரசாமி, 53; தொழிலாளி. இவர், நேற்று காலை 6:00 மணிக்கு, அன்னூர்- சத்தி சாலையில், பட்டறை அருகே சாலையை கடந்துள்ளார்.

அப்போது அன்னூரில் இருந்து புளியம்பட்டி நோக்கி கணேசமூர்த்தி என்பவர் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் குமாரசாமி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த குமாரசாமி அதே இடத்தில் இறந்தார். காயமடைந்த கணேசமூர்த்தி, கோவில்பாளையம் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

அன்னூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement