பாரதியார் பல்கலை அளவில் முதலிடம் குமரன் கல்லுாரியின் ‘தங்க’ மாணவியர்
திருப்பூர், செப்.10–
பாரதியார் பல்கலைக்கழக தேர்வில், திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியை சேர்ந்த ஏழு மாணவியர் பல்கலை அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றனர்.
கடந்தாண்டு நடந்த தேர்வில், கல்லுாரியை சேர்ந்த 39 மாணவியர் பல்கலை அளவில் ரேங்க் பெற்றனர். இதில், பி.காம்., கூட்டுறவு பிரிவில் ரிச்சிக்காஸ்ரீ, பி.எஸ்.சி., கணிதம் சி.ஏ., பிரிவில் காவ்யா, எம்.காம்., பிரிவில் ராகசுதா, எம்.காம்., ஐ.பி., பிரிவில் ராஹினி முதலிடம் பிடித்தனர்.
மேலும், எம்.எஸ்.சி., மைக்ரோ பிரிவில் அனிதா, எம்.காம்., சி.ஏ., பிரிவில் அமுதா, எம்.ஏ., ஆங்கிலம் பிரிவில் தன்யலோஷினி ஆகியோரும் பல்கலை அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றனர். ஆறு பேர் இரண்டாமிடமும், நான்கு பேர் மூன்றாமிடமும் பெற்றனர். சாதனை படைத்த மாணவியரை கல்லுாரி தலைவர் மற்றும் தாளாளர் செந்தில்நாதன், தொடர்பு அலுவலர் கார்த்திகை செல்வி, முதல்வர் வசந்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.