அரசு பஸ்சை சிறை பிடித்து கிராம மக்கள் சாலை மறியல்

தர்மபுரி: தர்மபுரியில் இருந்து காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு பகுதிக்கு கொளகத்துார் வழியாக வழித்தடம் எண், 17, 30ஏ என இரண்டு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில், காலை நேரத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் அதிகளவில் பய-ணிப்பதால் பஸ்சில் தினமும் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்ப-டுகிறது. நேற்று காலை, 8:30 மணிக்கு, '30ஏ' அரசு டவுன் பஸ் கொளகத்துார் அருகே சென்றபோது, அதில் பயணம் செய்த, 10ம் வகுப்பு படிக்கும், 2 மாணவர்கள் கூட்ட நெரிசலால் படி-கட்டில் இருந்து, தவறி விழுந்து காயமடைந்தனர். இதையடுத்து நேற்று மாலை, 5:30 மணிக்கு கொளத்துார் பகுதி மக்கள் பஸ்-களை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.


அவர்களை, தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் அறிவழகன், தர்மபுரி போக்குவரத்து கழக கிளை மேலாளர் வெங்கடாசலம் ஆகியோர் சமாதானம் செய்தனர். மேலும், தினமும் இதேபோல் இன்னல்-களில் சிக்கி தவிப்பதால், காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertisement