போதை மாத்திரை, ஊசி விற்ற மூவருக்கு 'காப்பு'
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் மலை கோவில் அடி-வாரத்திலுள்ள பேரூராட்சி கழிவறை அருகே, சிலர் போதை ஊசி மற்றும் மருந்தை விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்-தது. அதன்படி காரிமங்கலம் எஸ்.ஐ., பச்சமுத்து மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மதியம், 1:45 மணிக்கு அப்பகு-தியில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு நின்று கொண்டி-ருந்த, 3 பேர் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் துரத்தி பிடித்தனர். விசாரணையில், மூவரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த பூவரசன், 25, நவாஷ் பாஷா, 35, சித்திக், 26, என தெரிந்தது. அவர்கள் வலி நிவாரணி மருந்து-களை ஆன்லைனில் குறைந்த விலைக்கு வாங்கி, அதில் போதை தரும் பொருட்களை கலந்து, ஊசி மூலம் நரம்பில் செலுத்-தினால், அதிக போதை கிடைக்கும் எனக்கூறி, அவற்றை அதிக விலைக்கு விற்றது தெரிந்தது. அவர்களிடமிருந்து, 80 மாத்தி-ரைகள் மற்றும், 2 சிரிஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மூவ-ரையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்-றனர்.